சென்னையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்தின் முக்கியதுவத்தை மாவட்டஆட்சியர் மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.
உலக உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஊட்டச்சத்து நிறைந்த உணவின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக ஆறு நிறங்களில் உருவாக்கப்பட்ட பயோ ஷாட் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
மத்திய உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த லோகோவில் மஞ்சள் நிறம் பருப்பு மற்றும் தானிய வகைகளை கொண்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பச்சைநிறம் காய்கறிகள் மற்றும் பழங்கள் சார்ந்த உணவுகளை குறிக்கின்றன. இதேபோல அதிக அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை கடல் நீல நிறமும் பால்சார்ந்த உணவுப் பொருட்களை கரு நீல நிறமும் இறைச்சி மற்றும் மீன் சார்ந்த உணவுகளை கொழுப்பு சார்ந்த உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பழுப்பு மற்றும் ஊதா நிறமும் உணர்த்துகின்றன. இதனை மாணவிகள் முன்பு அறிமுகப்படுத்திய மாவட்ட ஆட்சியர் இதனை பின்பற்றினால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம் என்று தெரிவித்தார்.