Categories
உலக செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பல்…. மூன்று மாதங்களுக்கு பின் பயணம்….!!

சூயஸ் கால்வாயில் மூன்று மாதங்களாக சிறை பிடித்து வைக்கப்பட்ட எவர்கிரீன் சரக்கு கப்பல் தனது பயணத்தை துவக்கி உள்ளது.

எகிப்து சூயஸ் கால்வாய் சர்வதேச கடல் போக்குவரத்து தளமாக செயல்பட்டு வருகிறது. இந்த கால்வாயை பல நாடுகளின் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தளமாக பயன்படுத்தி போக்குவரத்திற்கான கட்டணம் தொகையையும் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான எவர்கிரீன் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் கால்வாயை கடக்கும்போது பெரிய சூறாவளி காற்று வீசியது. இதனால் எவர்கிரீன் கப்பல் கால்வாயின் குறுக்கே சிக்கியதால் ஆறு நாட்களாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சூயஸ் கால்வாய் ஆணையம் தனக்கு ஏற்பட்ட போக்குவரத்து நஷ்டத்தை ஈடு செய்ய ரூ.4,225 கோடி நஷ்ட ஈடாக கேட்டதோடு கப்பலையும் அதில் பணிபுரியும் ஊழியர்களையும் சிறை பிடித்து வைத்திருந்தது. ஆனால் ஜப்பான் நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை நஷ்ட ஈடாக வழங்க முடியாது என்று வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் பல மாதங்களாக நடந்த வாதங்களுக்குப் பின்னர் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து எவன் கப்பல் தனது பயணத்தை துவக்கியுள்ளது. இதனிடையே எவ்வளவு அபராதம் செலுத்தப்பட்டது என்ற தகவல்களை இரு தரப்பினரும் தெரிவிக்கவில்லை.

Categories

Tech |