Categories
பல்சுவை

நம் பூமியை நாமே பாதுகாக்க…. உலக சுற்றுச்சூழல் தினம்….!!

1972 ஜூலை 5 உலக சுற்றுச்சூழல் தினம். நிலம், நீர், காற்று என்று எங்கும் வாசம் நிறைந்த சூழலில் மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை விழி பிதுங்க வைக்கும் மனிதப் பேராசையின் உச்சகட்டமாக சுற்றுப்புற கேடு இன்று உருவெடுத்துள்ளது.

புற ஊதாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுக்கள் சுற்று சூழலை கெடுக்கும் காரணிகளில் முக்கிய இடம் வகிக்கின்றன. காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு வாயு நுரையீரல் பாதிப்பையும், சல்பர் ஆக்சைடு வாயு தலைவலி வாந்தியையும், அமோனியா வாயு மூச்சுக் குழாயில் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.

அள்ளப்படும் மணல்களால் ஆறுகள் காணாமல் போகின்றன. மிதமிஞ்சி உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ரசாயன உரப் பயன்பாட்டால் உதவாதது ஆகிவிட்டது மண். மொத்தத்தில் இயற்கைக்கு எதிரான மனித செயல்பாடுகளால் மனித வாழ்வு கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் கேட்டால் வருங்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு 1972 ஆம் ஆண்டு முதல் ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச் சூழல் தினமாக அறிவித்தது. சூழல் பாதுகாப்பின் அவசியம் உணர்ந்து உலகம் கூடி சுகாதார தேரினை இழுக்க வேண்டியதை நினைவுபடுத்தும் சுற்றுச்சூழல் நாள் இன்று.

Categories

Tech |