Categories
உலக செய்திகள்

சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டணம்…. நடைமுறைக்கு வரப்போகும் புதிய திட்டம்…. வெளியான முக்கிய தகவல்….!!

பிரான்ஸ் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை கட்டண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை கட்டணங்கள் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அரசின் பேச்சாளர் Gabriel Attal வெளியிட்டுள்ள அறிவிப்பில் கோடைகாலத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதற்கான கட்டணம் 49 யூரோக்கள் என்றும் இந்த புதிய திட்டம் ஜூலை 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |