Categories
உலக செய்திகள்

எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடனும் போல இருக்கு…. நகருக்குள் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகருக்குள் ஹெலிகாப்டரை பைலட் தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா Saskatchewan  மாகாணத்தில் உள்ள Tisdale நகரத்தில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி Dairy Queen ஹோட்டலின் முன்பு சிவப்பு வண்ணம் பூசிய ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டது. இதனிடையே அப்பகுதி மக்கள் மருத்துவ விமான ஆம்புலன்ஸ் அதே வண்ணம் என்பதால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் விமானம் வந்திருக்கும் என நினைத்துக் கொண்டனர். ஆனால் அந்த ஹெலிகாப்டரில் இயக்கிய பைலட் உணவகத்திற்கு வந்து ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு சென்றுள்ளார். மேலும் ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் அப்பகுதி முழுவதும் தூசு மற்றும் குப்பைகள் காற்றில் பறந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் பைலட் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதால் முன்னறிவிப்பின்றி  ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பைலட் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பைலட்டிடம் ஹெலிகாப்டரை இறக்க லைசென்ஸ் இருந்தாலும் கண்ட இடங்களில் பார்க்கிங் செய்வது குற்றம் என்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது அவ்வளவு பெரிய அவசரத் தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |