இரண்டு தடுப்பூசிகளும் போட்டு கொண்டவர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
கொரோனாவின் பிடியில் சிக்கி அதிக பாதிப்புகளை உள்ளடக்கிய நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் ஒன்றாகும். இதனிடையே இதனை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிகள் மட்டுமே தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இதுவரை பிரிட்டனில் 80% பேருக்கு முதல் தடுப்பூசி டோஸ் மற்றும் 60% பேருக்கு இரண்டாவது தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளிநாடு செல்ல விரும்புவோர் இரண்டு தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் அவர்கள் சுற்றுலா செல்ல வெளிநாடுகளுக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.