Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள்…. மீறி நடந்த காவல்துறையினர்…. கண்டனம் தெரிவித்த கொரோனா கண்காணிப்பாளர்….!!

பிரிட்டனில் கொரோனா விதிமுறைகளை மீறி நடந்த காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கொரோனா குறைந்து வருவதால் சில ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Shetland-Lerwick நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆறு நபர்கள் சேர்ந்து விருந்து விழா கொண்டாடியுள்ளனர். இந்த விருந்தில் மூன்று காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உட்பட விருந்தில் கலந்து கொண்ட 6 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கொரோனா கண்காணிப்பாளர் மேகி பெட்டிக்ரூ கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாதாரண மக்கள் கூட கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால் இந்த விருந்து நிகழ்வில் காவல்துறையினர் கலந்துகொண்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் இது அவர்களின் பொறுப்பற்ற பணியின் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |