Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யா, பெலாரஸ் நாடுகளின் திட்டங்கள் நிறுத்தம்… உலக வங்கி அதிரடி…!!!

உலக வங்கி, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து, கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், உலக வங்கி, ரஷ்யா மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் பெலாரஸ் நாட்டின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் போர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எதிரான ரஷ்யாவின் விரோதம் காரணமாக உலக வங்கி குழு, ரஷ்யா மற்றும் பெலாரஸின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தியிருக்கிறது. இது உடனே நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |