உலக வங்கி உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான நிலைக்காக உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் போரில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டாம் நாளாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் உலக வங்கி உடனடியாக உக்ரைன் நாட்டிற்கு நிதி உதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
உலக வங்கி குழுவின் தலைவரான டேவிட் மல்பாஸ், அதிர்ச்சிகரமான கலவரத்தாலும், உயிர் பலிகளாலும், உலக வங்கி அதிர்ச்சியில் இருக்கிறது. உக்ரைன் நாட்டுடன் நெடுங்கால நட்பில் இருக்கும் நாங்கள், இந்த நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.