போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜென்டினாவை சேர்ந்த கிறிஸ்தவ தலைவர் போப் ஆண்டவருக்கு கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் பெருங்குடலில் பிரச்சனை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவக்கல்லூரியில் அறுவை சிகிச்சை செய்யப்ப்பட்டது. இந்நிலையில் போப்பாண்டவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும் அவரின் உடல்நிலை தற்போது நலமாக உள்ளது என்றும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.