ஆப்கான் காபூல் நகரை மீண்டும் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளின் சொத்து மதிப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1994 ஆம் ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய முஜாஹிதீன்களின் என்ற பகுதியினரால் தாலிபான்கள் என்ற அமைப்பை உருவாக்கப்பட்டது. மேலும் தாலிபான்கள் என்பதன் பொருள் பஷ்தூன் மொழியில் மாணவர் என்பதாகும். இதனிடையே அந்த காலகட்டத்தில் தாலிபான்களுக்கு எதிராகவும் ஒரு அமைப்பு உருவானதால் உள்நாட்டில் அமைதி இன்மை நிலவியது. இதனை தொடர்ந்து தலிபான் அமைப்பினர் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம் எனக் கூறினார்கள். இதனிடையே 1996 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ராணுவம் 2001இல் ஆப்கானில் இருந்து தலிபான்களை வெளியேற்றியது.
இந்நிலையில் தலிபான்களின் சொத்து விவரம் வெளியாகியுள்ளது. மேலும்ஆட்சி அதிகாரம் இல்லாத தலிபான்களுக்கு போதை மருந்து கடத்தல் மூலமாகவே சொத்து கிடைத்ததாகவும் மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியும் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2014-ம் பத்திரிக்கை வெளியிட்ட 10 தீவிரவாத அமைப்புகளின் அமைப்பு சொத்து மதிப்பு பட்டியலில் 2800 கோடி சொத்துமதிப்பு கொண்டிருந்த தாலிபான் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு 4,400 கோடி சொத்து மதிப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்கா 19 ஆண்டுகள் ஆப்கானில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மூன்று இலட்சம் டாலர் செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.