ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனிடையே கடந்த வாரத்தில் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் கைப்பற்றிய 6 நகரங்களில் இருக்கும் சிறைக் கைதிகளையும் விடுவித்துள்ளனர். இந்நிலையில் ஹெராத் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 31 குழந்தைகள், 24 பெண்கள் உட்பட 260 பேர் காயமடைந்து ஹெராத் மாகாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.