கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணைக்கு சீனா மறுப்பு தெரிவிப்பது பொறுப்பற்ற செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் புதிய வடிவில் உருமாற்றம் அடைவதால் தடுப்பூசி பெற்று கொண்டவர்களுக்கும் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விஞ்ஞானிகள் தரப்பு கொரோனா வைரஸின் முதல் தோற்றம் கண்டறியப்பட்டால் எளிதில் உருமாற்றத்திற்கு வழி கண்டறிய இயலும் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு மருத்துவ குழு ஒன்றை சீனாவின் வுகான் நகருக்கு நான்கு வாரங்களாக ஆய்வுகளை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்த ஆய்வு முடிவுகள் பலன் அளிக்காததால் மீண்டும் அடுத்த கட்ட ஆய்வை சீனாவின் பரிசோதனைக் கூடங்களில் தொடங்க இருக்கிறது. இதனிடையே சீனா உலக சுகாதார அமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆய்வுக்கூடங்களில் இருந்து தான் கொரோனா வைரஸ் வெளியானது என்பது அறிவியல் கருத்துக்கு புறம்பானது எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், சீனாவின் இந்த கருத்து ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் சீனா பொறுப்பற்று செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.