Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணுக்கு 68 வயது நபரின் மீது ஏற்பட்ட காதல்…. இதுதான் காரணம்…. விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த காதலர்கள்….!!

24 வயது இளம்பெண் 68 வயது நபரை காதலிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த Herb Dickerson(68) என்பவரும் 24 வயது Conni Cotten என்ற இளம் பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதனிடையே சாதாரண பருவக் காதலையே விமர்சிக்கும் இந்த சமூகம் இவர்களின் காதலிலும் அந்தப்பெண் பணத்திற்காக Herb Dickerson பழகுகிறார். மேலும் Conni Cotten உடலுக்காக தான் முதியவர் காதல் செய்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது.

இந்நிலையில் விமசனங்கள் குறித்து Conni Cotten  கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாங்கள் இருவரும் தன்னார்வ தொண்டின் போதுதான் சந்தித்துக் கொண்டோம் என்றும் இருவரும் முதலில் நல்ல நண்பர்களாக இருந்தோம் என தெரிவித்துள்ளார். பின்னர் எங்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது என்றும் வேறு எந்த காரணத்திற்காகவும் நாங்கள் காதலிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து Herb Dickerson(68) கூறுகையில் நாங்கள் இருவரும் வேறு வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் எனக்கு அவளை பிடித்துள்ளது என்றும் அதனால் நாங்கள் இருவரும் பழகி வருகிறோம் எனக் கூறினார்.மேலும் எங்களின் காதல் தான் நாங்கள் மது பழக்கத்திலிருந்து விடுபட காரணமாக அமைந்தது எனவும் கூறினார்.

Categories

Tech |