அமெரிக்கா கிரீன்லாந்து தீவை உறுதியாக வாங்க விரும்பவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள இருந்தார். அப்போது அவர் ஆர்டிக் பெருங்கடல் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இடையே உள்ள, 8 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவை உள்ளடக்கிய பனி பிரதேசமான கீரின்லாந்து தீவை வாங்க விரும்புகிறேன் என டென்மார்க் பிரதமரிடம் கூறினார்.
அதனை அவர் மறுக்கவே டொனால்டு டிரம்ப் டென்மார்க்கின் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில் தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பிளின்கன் டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்தக் கேள்வி அவரிடம் எழுந்ததால் அவர் அமெரிக்கா டென்மார்க்கை வாங்க விரும்பவில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார்.