விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பயணத்தின் போது ஏற்பட்ட பழுது என்ன என்பதை கண்டறிய இயலும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் சூலு மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சி-130 வகையைச் சேர்ந்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 46 ராணுவ வீரர்கள் மற்றும் 3 பொதுமக்கள் உட்பட 52 பேர் உயிரிழந்தனர். இதனிடையே கடந்த திங்கட்கிழமை விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கறுப்பு பெட்டி ஒன்று அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தப் பெட்டியின் மூலம் விமானிகளின் கடைசி உரையாடல் விவரங்கள் அறியப்படும் என்றும் விபத்து ஏற்பட்டபோது விமானத்தின் பழுது என்ன என்பதை கண்டறிய இயலும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.