இந்திய மாணவர்களின் வெளிநாடு கல்வி குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தை பலநாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், வேலைக்காகவோ, படிப்பிற்காக யாரும் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவதில்லை. அந்த வகையில்,
இந்தியாவில் கொரோனாவால் வெளிநாட்டில் கல்வி கற்பதில் இந்திய மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது. மாணவர்கள் ஆன்லைன் கல்வி மேற்கொள்வதால் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்கா விசா ரத்து செய்யப்படும் என்ற அதிபர் ட்ரம்ப் உத்தரவு குறிப்பாக அமெரிக்கா மீதான ஈர்ப்பை குறைத்துள்ளது. இந்த ஆண்டு வெளிநாட்டு கல்வி சேர்க்கையும் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டுமானால்,
நம் நாடும், நம் வீடும் தான் சிறந்தது என்பதையும் மாணவர்கள் கருத்தில் கொண்டுள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுக்கு கல்வி பயில்வதற்காக செல்லும் மாணவர்கள் ஆசையை தூண்டி இங்கு உள்ள ஏஜென்சிகள் கூடுதல் பணம் வசூலித்து தங்களது கஜானாக்களை நிரப்பி வந்ததாகவும், தற்போது கொரோனாவால் அந்த செயலும் நிறைவேறாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கிண்டலும் கேலியுமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.