தனது தம்பி மனைவியுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜனதாபுரம் சவுக்கு தோப்பு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வேலூரை சேர்ந்த ஒரு பொண்ணுடன் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் மனைவி அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனை அடுத்து கிருஷ்ணமூர்த்திக்கு ஹரி என்ற தம்பி இருக்கிறார். இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும் தனது தம்பி மனைவியுடன் தென்னந்தோப்பில் தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது தம்பி மனைவியுடன் தென்னந்தோப்பில் தனிமையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய தம்பி மனைவியும் தென்னந்தோப்பில் தனிமையில் சந்தித்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார். இதனைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிய போது திடீரென எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கிருஷ்ணமூர்த்தியின் தாயார் வள்ளியம்மாள் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கிருஷ்ணமூர்த்தியின் தனது தம்பி வீட்டில் ஏதோ பிரச்சினை என்ற தொலைபேசி அழைப்பு வந்ததினால் அங்கு சென்றுள்ளதாகவும், அவர் சென்ற 30 நிமிடத்திலேயே தவறி விழுந்து உயிரிழந்ததாகவும், வள்ளியம்மாள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.