ஆஸ்திரேலியாவில் சித்திரவதை அனுபவித்த தமிழ் பெண் எட்டு வருடங்களுக்கு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சேர்ந்த தம்பதியினர் தமிழகத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்மணியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று 2007 முதல் 2015ஆம் ஆண்டு வரை அடிமையாக வைத்திருந்தனர். ஆறுமாதம் டூரிஸ்ட் விசாவில் சென்ற அந்த பெண்ணை குழந்தைகளின் தம்பதியினரின் பராமரிப்பதற்காக வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர், அந்த பெண் அப்போது 40 கிலோ எடையுடன் இருந்திருக்கிறார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அந்த பெண் வீட்டில்தான் தங்க வைத்துள்ளனர். பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் கூட பேச விடாமல் கொடூரமாக தாக்கியுள்ளனர். தற்போது வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் கொரோனா நடவடிக்கை காரணமாக கடந்த வருடம் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தீவிரமாக நடந்து வந்த விசாரணையில் அந்த பெண் எப்படி இவ்வளவு காலம் மறைக்கப்பட்டு வைத்திருந்தார் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. குற்றங்கள் முழுவதும் நிரூபிக்கப்படாத நிலையில் அடிமையாக நடத்திய தம்பதியரின் விவரங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.