சுவிட்சர்லாந்தில் நிறுவனங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டுமென்று சில மண்டலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா எனும் கொடிய வைரசால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் சென்று பணியாற்றுபவர்கள் வீட்டிலேயே இருந்து பணி செய்ய வேண்டிய நிலைமை உருவாகியது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று சில மண்டலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
St.Gallen, சூரிஸ், பாஸல், Uri போன்ற மண்டலங்கள் பெடரல் கவுன்சிலுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இதுகுறித்து St.Gallen மண்டல பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியதாவது, ” பலர் வீட்டிலேயே இருந்து அலுவலகப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சிலரால் சிறப்பாக பணியை முடிக்க முடியவில்லை. மேலும் அவர்கள் குடும்ப அழுத்தத்தில் இருக்கின்றனர் ” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இந்த கோரிக்கையை எதிர்த்து பத்திற்கும் மேற்பட்ட மண்டலங்கள் பணியாளர்கள் வீட்டிலேயே இருந்து பணியாற்றலாம் என்று ஆதரவளித்து வருகிறது. மேலும் ஆர்கான், லூசர்ன் போன்ற மண்டலங்கள் பணியாளர்களை மொத்தமாக நிறுவனங்களுக்கு வரச்சொன்னால் கொரோனா வைரசின் மற்றொரு அலை பரவுவுவதற்கு அது முக்கிய காரணமாக அமையலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ” பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வது தொற்று நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் என்றும் நிறுவனங்களில் சென்று பணியாற்றுவதை விட வீட்டிலிருந்து பணியாற்றுவதால் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடிகிறது” என்றும் கண்டறிந்துள்ளது.