Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வேலைக்காரி செய்த வேலை” 2 வயது பெண் குழந்தை கடத்தல்….. மீட்பு பணியில் போலீஸ் தீவிரம்….!!

பல்லடத்தில் கடத்தப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை  சேர்ந்தவர் சுடலை ராஜன். சண்டை காரணமாக அவருடைய மனைவி செல்வி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர்களது 2 வயது குழந்தை மகாலட்சுமியை  சுடலை ராஜனும் அவரது தந்தை மாரியப்பனும் பராமரித்து வந்தனர்.

இதனிடையே சுடலைராஜன் பழனி செல்ல மாரியப்பன் தனது பேத்தியை பார்த்துக்கொள்ள பெண் ஒருவரை வீட்டில் தங்க வைத்துள்ளார். இதையடுத்து  மகாலட்சுமியும், குழந்தையை பராமரிக்க அழைத்து வரப்பட்ட பெண்ணும் காணாமல் போய்விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் காவல் துறையினர் பழனியில் இருந்து கொண்டுவரப்பட்ட பெண் குறித்து விசாரணை செய்ய தற்போது விசாரணைக்காக பழனி சென்றுள்ளனர்.

Categories

Tech |