Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெண்களின் கற்பம் “வயது முக்கியம்” இந்த வயதை சரியாக பயன்படுத்துங்க …!!

கர்ப்பமாக முக்கியமான விடயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது.கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அப்போது நான் இந்த வயதுகளில் இல்லை எனறால் எனக்கு குழந்தை பிறக்காதா?

அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

மேலே கூறியவை பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு பற்றியது தானே தவிர, குழந்தைகள் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்பது பற்றி சொல்ல முடியாது.

Categories

Tech |