Categories
பல்சுவை

அவள் பேதையும் அல்ல போதையும் அல்ல… வெளிச்சம் தரும் திருவிளக்கு அவள்..!!

பெண்கள் வெளிச்சம் தரும் திருவிளக்கு. பெண்கள் விட்டில்கள் அல்ல. பெண்கள் வீர நெருப்பு களை ஈன்றெடுத்த எரிமலைக் குழம்புகள். வீர விடுதலைக்காய் உதிரத்தை உரமாக்கிய சரித்திர சான்றுகள். கயவர்களால் கருவறை கல்லறை ஆனாலும்  வீரமறவர்களை  மடியில் தாங்கிய மாதாக்கள்.  போரிலே  மறவன்  பசியால் மடியாமல்  இருக்க  தன் முலைப்பாலை புகட்டி   போருக்கு அனுப்பிய  வீர திலகங்கள், விடுதலை வெளிச்சங்கள். பெண்களை விளம்பரப் பொருளாக ஆக்கி வீதியில் நசுக்கியது போதும். பெண்களை காம பொருளாக்கி கசக்கி முகர்ந்தது போதும். பெண் என்பவள் போதையும் அல்ல அவள் பேதையும் அல்ல. இந்த சமுதாய விடியலுக்கு வெளிச்சம் தரும் திருவிளக்கு தான் பெண்.

Categories

Tech |