இளையான்குடியில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
நேற்று பல்வேறு இடங்களில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மகளிர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர். அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியிலும் மகளிர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழா இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக அனைத்து மகளிர் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் என அனைவரும் இணைந்து கொண்டாடியுள்ளனர். அப்போது அலுவலகத்தினுள் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த அலுவலகத்திற்கு வருகை தந்த பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறி இனிப்புகளும் வழங்கியுள்ளனர். இந்த விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவரும் ஒரே சேலையில் வந்துள்ளனர். பின் ஒருவருக்கொருவர் மகளிர் தின வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்துள்ளனர்.