காதல் என்ற பெயரில் ஒரு ஆண் சிறுமிகள், பெண்களை ஏமாற்றி அவளைத் காதலிப்பதாக நம்ப வைத்து உணர்ச்சிரீதியாக துஸ்பிரயோகம் செய்து விடுகிறார். மேலும் அந்த பெண்ணை பாலியல் தொழிலுக்குள் தள்ளியும் விடுகிறார். அத்துடன் முடிந்து விடாமல் அந்தப் பெண் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொரு பணத்தையும் ஏமாற்றி மோசடி செய்கிறார். இப்படித்தான் ஜெர்மனி நாட்டில் சிறுமியர்கள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியில் போலீசாரும் சுங்கத்துறையினரும் சுமார் 510 கடத்தல் வழக்குகளை இதுபோன்ற சந்தித்துள்ளார்கள்.
இதில் கவலைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் முந்தை ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரித்தது தான். இவ்வாறு கடத்தப்படும் வழக்குகளில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாக பெடரல் கிரிமினல் போலீஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை குறைந்தது 237 சிறுவர் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டுள்ள 427 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதும் அவர்களில் ஜெர்மனியர்கள் பலர் இருந்தாலும் புலம்பெயர்ந்தோறும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.