Categories
தேசிய செய்திகள்

கோர்ட்டில் பெண் வழக்கறிஞர்கள் தலைவாரக் கூடாது….. திடீர் உத்தரவால் வெடித்த சர்ச்சை…..!!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு பெண் வழக்கறிஞர்கள் சீப்பை வைத்து தலை சீவுவதால் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நீதிமன்றத்திற்குள் பெண் வழக்கறிஞர்கள் தலை சீவக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‌ இது குறித்து நீதிமன்ற பதிவாளர் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதை எதிர்த்து மூத்த பெண் வழக்கறிஞர்கள் உட்பட பெண் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்‌. அதோடு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சர்ச்சைகுள்ளானது எனவும் விமர்சித்துள்ளனர். இதன் காரணமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த உத்தரவானது திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் தலை சீவக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது அங்கு சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |