அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக இருக்கும் நபர், ஒரு வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை பள்ளியில் தொடங்கி பல இடங்களில் நடக்கிறது. எனினும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள செண்ட் ஆல்பன்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் 32 வயது நபர் பவுல் லாட்.
எனோஸ்பெர்க் உயர்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான கால்பந்து பயிற்சியாளராக இருக்கும் இவர் ஒரு வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை ஜாமீனில் வெளிவராத வகையில் கைது செய்திருக்கின்றனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.