காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்த கார்மேகம்-வசந்தா தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்கள் கே.வி குப்பத்தை அடுத்து பசுமாத்தூரில் ஜெகநாதன் என்பவரது நிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று நிலத்திற்கு பணிக்குசென்ற வசந்தா திடீரென காணவில்லை என கணவன் கார்மேகம் பல இடங்களிலும் தேடியுள்ளார். மாலையில்தேய் நீளத்தில் இருந்த கிணற்றின் உள்ளே பிணமாக கிடந்துள்ளார் வசந்தா. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கே.வி குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து காவல்துறை வசந்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வசந்தா கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறி கிணற்றுக்குள் விழுந்தாரா என வெவ்வேறு கோணங்களில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.