Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் IPL T20I போட்டியா ? கங்குலியின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி ….!!

பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நிச்சயம் நடைபெறும் என கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு இந்திய வீராங்கனைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இரண்டு வருடங்களாக 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா அச்சத்தினால் பெண்கள் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்நிலையில் போட்டியானது நிச்சயம் நடைபெறும் என்பதை கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார்.

போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாமுக்கும் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்று அணிகள் இடையே இந்தப் போட்டியானது நடைபெறும் என்றும் நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

Categories

Tech |