பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது ஓ மை கோஸ்ட் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சதீஷ் ஹிந்தி நடிகையான சன்னி லியோன் அழகாக பட்டுப் புடவையில் வந்திருக்கிறார் என்றும், கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார் என்றும் கூறினார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சதீஷ் தர்ஷாவின் அனுமதியோடு தான் அப்படி மேடையில் பேசியதாக கூறினார். ஆனால் நடிகை தர்ஷா குப்தா தன்னைப் பற்றி யாராவது மேடையில் அசிங்கமாக பேசுங்கள் என்று கூறுவார்களா?. இந்த விஷயத்தில் நடிகர் சதீஷ் பொய் சொல்லி இருக்கிறார் என்று ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு இயக்குனர் நவீன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தர்ஷாவின் பதிவை பாடகி சின்மயி தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு சதீஷுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில் பொது இடங்களில் சிலரின் கோமாளித் தனமான பேச்சுக்களால் பெண்கள் அசிங்கப்படுகிறார்கள். இதை ஆண்கள் ஒருபோதும் உணர்வது கிடையாது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
This is horrendous.
If anyone needs to forgive him, it is her.
I dont think men who throw such jokes in public domains realize this is how women get shamed time and again and this is a license to heckle.
Horrible. https://t.co/7JLIRhutKW
— Chinmayi Sripaada (@Chinmayi) November 10, 2022