Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போர்… உக்ரைனில் பெண்களுக்கு பயிற்சிகள் தீவிரம்… பல யுக்திகளை கையாளும் மக்கள்..!!!

உக்ரைன் நாட்டில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் போர் பயிற்சிகளை பெற்று ரஷ்ய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள்.

ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ஐந்தாம் நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இரு நாட்டுப் படைகளுக்கும் நடந்த மோதலில் ரஷ்ய தரப்பில் 4300 வீரர்கள் பலியானதாக உக்ரைன் அரசு அறிவிப்பு வெளியிட்டது. உக்ரைன் அரசு, நாட்டு மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கென்று, அவர்களுக்கு பல போர் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதுதொடர்பில் உக்ரைன் நாட்டின் சோர்த்கிவ் நகர மேயர் ஷ்மத்கோ தெரிவித்ததாவது, இந்த போரில் ரஷ்ய படைகளை திணறடிப்பதற்காக சாலை வழிகாட்டி பலகைகளை அகற்றியுள்ளோம். தெரு விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கிறது.

முக்கியமான நுழைவு பகுதிகளில் சோதனை சாவடிகளில் வைக்கப்பட்டிருக்கிறது. மணல் முட்டைகளையும், டயர்களையும் வைத்து உள்ளூர் மக்கள் 80 பேர் தடுப்புகள் அமைத்து வருகிறார்கள். அந்த சாலை வழியாக பீரங்கிகள் நுழைந்தால், உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

அதன்பின்பு, சோதனை சாவடியில் இருந்தவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று விடுவார்கள். ஒரு வெடி குண்டை வெடிக்க செய்து சோதனை சாவடி அழிக்கப்படும். எதிரிகளை மொத்தமாக கொன்று விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ரஷ்ய படைகள் பீரங்கிகளை வீசும் போது, அதை எதிர்கொள்ள இராணுவம் மற்றும் மக்களுக்கு உயர்மட்ட திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் காலியான காக்டெயில் பாட்டில்களை வைத்து பெட்ரோல் எறிகுண்டுகள் தயாரித்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக பல்வேறு போர் யுத்திகளை மேற்கொண்டு ரஷ்யப் படைகளை எதிர்கொள்வதற்காக இராணுவத்தினரும் பொதுமக்களும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

Categories

Tech |