பிலிப்பைன்ஸ் நாட்டில் மது போதையில் இருந்த ஒருவர், முகவரி கேட்ட பெண்ணை கொலை செய்து அப்பெண்ணின் மூளையை தின்றுள்ளார்.
இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு பகுதியில் ஆச்சரியமாக செயல் நடந்து கொண்டே இருக்கிறது. அது,சிரிப்பை தரக்கூடியதாகவும் இருக்கலாம்,அல்லது நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வாகவும் இருக்கலாம். அந்நிகழ்வுகள் எல்லாம் இன்டர்நெட் வாயிலாக நம்மிடையே வந்து சேர்க்கின்றன.இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் மதுபோதையில் மிதந்துக்கொண்டிருந்த நபர் ஒருவர், அவரிடம் முகவரி கேட்டு வந்த பெண்ணை கொலை செய்துஅவளுடைய மூளையையும் தின்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
பிலிப்பைன்ஸில் சமீபத்தில் இறந்த ஒரு பெண்ணின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். ஆனால், அந்தஉடலில் தலை துண்டிக்கப்பட்டு வெறும் உடம்பு மட்டுமே இருந்ததால் அந்த பெண் யார் என்பதை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி காவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை செய்துகொண்டிருந்த போது, அங்கு சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றிவந்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவனை பிடித்து விசாரணை செய்தனர். அவர் பெயர் பேக்டாங்க் (Bagtong). இந்நிலையில் அவரிடம் நிகழ்த்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை கூறியுள்ளார்.