Categories
உலக செய்திகள்

உடற்பயிற்சி கூடத்தில் தலைகீழாக தொங்கிய பெண்…. ஸ்மார்ட் வாட்ச்சால் காப்பாற்றப்பட்ட சம்பவம்…!!!

அமெரிக்காவில் உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் தலைகீழாக மாட்டிக் கொண்ட பெண், தன் ஸ்மார்ட் வாட்ச் ஆல் தப்பித்திருக்கிறார்.

அமெரிக்க நாட்டின் ஒஹியோ என்னும் மாகாணத்தில் இருக்கும் பெரீயாவில் அமைந்திருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் கிறிஸ்டைன் பால்ட்ஸ் என்ற பெண் தலைகீழாக தொங்கியவாறு உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் இறங்க முடியாமல் போனது.

அவருக்கு அருகில் யாரும் அங்கு உடற்பயிற்சி செய்யவில்லை. தனியாக இருந்திருக்கிறார். எனினும் அந்த உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ஒரு நபரை அழைத்திருக்கிறார். ஆனால், அங்கு பாடல் ஓடிக் கொண்டிருந்ததால், அந்த சத்தத்தில் அவர் அழைத்தது அந்த நபருக்கு கேட்கவில்லை. நேரம் செல்ல, செல்ல அதிக சிரமத்தை எதிர்கொண்டார்.

இந்நிலையில், தன் கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி 911 என்ற எண்களை அழுத்தி காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அதன் பிறகு, அதிகாரி ஒருவர் அந்த உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து அந்த பெண்ணை மீட்டுள்ளார்.

Categories

Tech |