பெண் நிர்வாணமாக ஓடவிட்டு அவர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ ஓன்று சமூக ஊடகங்களில் பரவியாதல் காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சில சமூக ஊடக அறிக்கையின்படி இந்த சம்பவம் தொட்டலங்காவில் (இலங்கை) நடந்தது என கூறப்படுகிறது.
நிர்வாணப் பெண் ஒருவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு சில ஆண்களால் தாக்கப்படுவது அந்த வீடியோ பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணையை தொடங்கிஉள்ளது.
மேலும் இது குறித்த விசாரணைகளுக்காக இந்த வழக்கு காவல் துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குற்ற பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.