கனடாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 1980 ஆம் வருடத்திலிருந்து மாயமானதாக கருதப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கும் Vanier என்னும் இடத்தில் வசித்து வந்த இளம் பெண் நான்சி, கடந்த 1980 ஆம் வருடம் ஜூலை 16ஆம் தேதி அன்று காணாமல் போனார். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் கடைசியாக ஒரு டாக்ஸியில் பயணம் செய்தது தெரிய வந்திருக்கிறது.
விசாரணை மேற்கொண்ட போது அவர் தெரிவித்ததாவது, நான் எங்கு செல்கிறேன் என்று எனக்கே தெரியாது ரொரன்றோ அல்லது மொன்றியலுக்கு போகலாம் என்று தெரிவித்ததாக கூறியிருக்கிறார். அதன் பின்பு, அவரை காணவில்லை. குடும்பத்தினர் அவர் மாயமானதால் வருத்தத்துடன் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் சுமார் 42 வருடங்கள் கழித்து, நான்சி பற்றிய தகவல் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அவர், வெளிநாட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த தகவலை ஒரு நபர் தெரிவித்திருக்கிறார்.
எனவே, குடும்பத்தினர் எங்கோ ஒரு நாட்டில் அவர் நிம்மதியாக வாழ்கிறார் என்று தெரிந்து மகிழ்ச்சியடைந்த அடுத்த நொடியே அந்த நபர் மற்றொரு தகவலையும் தெரிவித்தார். அதாவது நான்சி, தற்போது இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார். எனவே, அவரின் குடும்பத்தினர் மிகுந்த மன வருத்தமும், ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள்.