ருமேனியாவில் கரடிகள் செல்வதை கவனிக்காமல் அவற்றின் பின் சென்ற பெண்ணை கரடிகள் விரட்டி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பகுதியிலிருக்கும் சினையா என்னுமிடத்தில் இருக்கும் வனப்பகுதிக்கு அருகில் இரவில் ஒரு வீட்டின் வழியே 2 கரடிகள் சென்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல், அந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் அவற்றிற்கு பின்னால் சென்றுவிட்டார்.
அதன்பின்பு, கரடிகளை பார்த்த அவர், பதறியடித்துக்கொண்டு ஓடி வந்து தன் வீட்டின் கதவை வேகமாக அடைத்துவிட்டார். அந்த பெண் கதவை அடைத்த, அடுத்த நிமிடமே அந்த பெண்ணை நோக்கி கரடிகள் வந்துவிட்டது. தகுந்த நேரத்தில் அந்த பெண் சுதாரித்துக் கொண்டதால் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார்.