கனடாவில் பெண் ஒருவர் இளம்வயதில் தன் கணவரையும், குழந்தையையும் இழந்து தவித்து வருகிறார்.
கனடாவைச் சேர்ந்த Goetz Young என்ற 32 வயது பெண்ணின் கணவர் சமீபத்தில் இறந்திருக்கிறார். எனவே, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் Langley என்ற பகுதியிலிருந்து Merritt என்னும் பகுதிக்கு சென்று, தன் பெற்றோருடன் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்று, Ember (6) மற்றும் Hailey (5) ஆகிய தன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதியன்று பெருவெள்ளம் ஏற்பட்டு, அப்பகுதியை சேர்ந்த அனைத்து மக்களையும் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அவர் தன் இரண்டு பிள்ளைகளையும், Kamloops என்ற பகுதிக்கு சென்று, அங்கிருந்த ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார். அங்கு அதிகம் செலவானதால், மீண்டும் Lower Nicola என்ற இடத்தில் வசிக்கும் தன் தோழியின் வீட்டிற்கு செல்ல தீர்மானித்தார்.
எனவே, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளும் அங்கு புறப்பட்டனர். ஆனால் வழக்கமாக அவர்கள் செல்லக்கூடிய சாலை அடைக்கப்பட்டிருந்தது. இதனால், 97C என்ற நெடுஞ்சாலையில் பயணித்தனர். அப்போது, திடீரென்று வாகனம் அவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த ட்ரக் மீது மோதி விட்டது.
வாகனத்திலிருந்து வெளியே வந்து அவர் அலறியதால், சாலையில் சென்று கொண்டிருந்த சிலர் ஓடி வந்து உதவி செய்தனர். இதில் துரதிஷ்டமாக அவரின் முதல் மகள் Ember இறந்துவிட்டார். இரண்டாவது மகளின் கை துண்டானது. மேலும், இவரின் கை விரல் உடைந்தது. தன் மகளை இழந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்.
இவ்வளவு சிறிய வயதில் எத்தனை போராட்டங்களை ஒருவரால் தாங்க முடியும்? என்று எனக்கு தெரியவில்லை. நிறைய விஷயங்கள் தவறாக நடந்து விட்டது. இது எதற்கு? என்று எனக்கு புரியவில்லை என்று Goetz கூறியிருக்கிறார்.