Categories
அரசியல்

அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமை சட்டம்…. பல தசாப்தங்களாக நடந்த போராட்டங்கள்…!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த பெண்கள் வாக்களிக்கக்கூடிய உரிமையை 19-ஆவது திருத்தம் சட்டபூர்வ முறையில் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க பெண்கள் வாக்களிக்கக்கூடிய உரிமையை பெறும் இந்த வெற்றிக்காக, மிக கடினமான போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து பல தலைமுறை பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவாக சொற்பொழிவு நடந்தது, பரப்புரை மேற்கொள்ளப்பட்டது, அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இது மட்டுமல்லாமல் அமெரிக்க மக்கள் பலர் அரசியலமைப்பினுடைய முக்கிய மாற்றமாக நினைப்பதை பெறுவதற்கு கீழ்ப்படியாமையை கடைபிடித்தனர். 1800 களில் ஆரம்பித்து வாக்களிக்கும் உரிமையை பெற பெண்கள், மறியலில் ஈடுபடுவது, மனு அனுப்புவது போன்ற பல வழிகளில் போராடி உள்ளனர்.

எனினும் அவர்களுக்கான உரிமை கிடைக்க பல தசாப்தங்கள் ஆனது. 1878-ஆம் ஆண்டிற்கு  நடுவில் முதல் தடவையாக காங்கிரஸில் சட்ட திருத்தம் அறிமுகமானது. அதனைத் தொடர்ந்து 1920 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி அன்று சட்ட திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது. பெண்களுக்கான வாக்களிப்பு உரிமையை பெற அயராது பாடுபட்டனர்.

எனினும் அவர்கள் தங்களுக்கான இலக்கை அடைய வேறு சில உத்திகள் தேவைப்பட்டது. அதன்படி சில மக்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வாக்குரிமை சட்டங்களை இயற்றக்கூடிய உத்தியை கையாண்டனர். அதன் பிறகு மேற்கத்திய மாநிலங்கள் சில 1912 ஆம் வருடத்திற்குள் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.

எனினும், பிற மாநிலங்கள் ஆண்களுக்கான வாக்குரிமை சட்டத்தை மற்றும் பின்பற்றி வந்தன. எனவே, மீண்டும் மறியல், அமைதியான முறையில் விழிப்புணர்வு போராட்டம், உண்ணாவிரதம் மேற்கொள்வது போன்றவை கையாளப்பட்டது. இதனால் ஆதரவாளர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்கள். 1916 ஆம் வருடத்தில் ஏறக்குறைய முக்கிய வாக்குரிமை அமைப்புகள் அனைத்தும் அரசியலமைப்பு திருத்த குறிக்கோள்களின் கீழ் ஒன்றிணைந்தன. 1917 ஆம் வருடத்தில் நியூயார்க், பெண் வாக்குரிமையை ஏற்ற சமயத்தில் அதிபர் வில்சன் 1918 ஆம் வருடத்தில் ஒரு திருத்தத்தை ஆதரிக்க தன் நிலையை மாற்றிக் கொண்டார்.

அரசியலின் சமநிலை மாறியது. 1919 ஆம் வருடம் மே மாதம் 21ஆம் தேதி அன்று பிரதிநிதிகள் சபை திருத்தத்தை நிறைவேற்றியது. அதனை தொடர்ந்து 1920 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 18ஆம் தேதி அன்று 36 ஆம் மாநிலமாக டென்னிசி திருத்தத்தை அங்கீகரித்தது. அப்போது நான்கில் மூன்று பங்கு மாநிலங்களுக்குரிய ஒப்பந்தத்தை பெற கடைசி தடையை திருத்தம் நிறைவேற்றியது.

பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்க பரப்புரை அதிகரித்தது. எனினும், முழுமையான அங்கீகாரம் உறுதிப்படுத்தப்படவில்லை. வாக்களிப்பதற்கான வாக்குறுதியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் வேறு சிறுபான்மை பெண்களை இணைக்க பல தசாப்தங்களாக போராட்டம் நடந்தது. பாகுபாடான மாநில வாக்களிப்பு சட்டங்களால் பெண்கள் பலர் இருபதாம் நூற்றாண்டில் பல காலங்களாக வாக்களிக்க முடியாத நிலை இருக்கிறது.

Categories

Tech |