சுவிட்சர்லாந்தில், நண்பருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பாறைகள் உருண்டு விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள Valais மாகாணத்தில் இருக்கும் Verbier கிராமத்தில், பிரிட்டனைச் சேர்ந்த 43 வயதான பெண், அவரின் நண்பரோடு நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு திடீரென்று பாறைகள் உருண்டு வந்திருக்கிறது. அவை அந்த பெண்ணின் மேல் விழுந்துள்ளது.
இதில், அவரின் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, மீட்பு குழுவினர் அந்த பெண் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அதன்பின்பு, காவல்துறையினர் இக்கோர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும், அந்தப் பெண் குறித்து வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.