பிரிட்டனில் தேன் நிலவுக்குச் சென்ற இளம்பெண் மலைமுகட்டில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள மேற்கு யார்க்ஷயர் பகுதியில் வசிக்கும், ஃபவ்ஸியா ஜாவேத் என்ற 31 வயது பெண், திருமண வரவேற்பு முடிந்த சில நாட்களில் எடின்பர்க்-ற்கு தன் கணவருடன் தேன் நிலவுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணிக்கு Arthur’s Seat மலை முகட்டிலிருந்து, எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார்.
எனவே, அவசர உதவி குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, காவல்துறையினர், மீட்புக்குழுவினர் மற்றும் அவசர உதவி குழுவினருடன் சேர்ந்து அவரை மீட்க கடுமையாக போராடினர். எனினும், பல மணி நேர போராட்டத்திற்கு சடலமாகத் தான் மீட்கப்பட்டுள்ளார். விசாரணையில், இவர் கடந்த வருடம் இறுதி வரை தொண்டு நிறுவனங்களுக்கான சேவையில் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, ஸ்கொட்லாந்திற்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பில், 27 வயதுடைய ஒரு இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.