லண்டனில் ஒரு உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு கோழியின் தலை அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
லண்டனில் ஒரு பெண், பிரபல உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்திருக்கிறார். அதன்பின்பு வீட்டிற்கு வந்த உணவை ஆவலுடன் திறந்து பார்த்தவர் அதிர்ந்து போனார். காரணம், அந்த பார்சலில் கோழியின் தலை முழுமையாக பொறிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்தப் பெண் உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டார்.
மேலும், “ஆர்டர் செய்த உணவில் கோழியின் முழு தலை, அப்படியே இருப்பதை பார்த்தேன். உடனே, அதனை தூக்கி எறிந்து விட்டேன்” என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கிடையில், அந்நிறுவனம், நாங்கள் தரமான கோழிக்கறியை வழங்குவதாக கூறியிருக்கிறது.
https://twitter.com/takeawaytrauma/status/1472956952112156680
உணவுகளை புதிதாக தயாரித்து தான் கொடுக்கிறோம், என்றும் கண்காணிப்பில் ஏற்பட்ட சிறிய தவறால் இவ்வாறு நடந்ததாகவும் கூறியிருக்கிறது. மேலும், அந்தப்பெண் மற்றும் அவரது குடும்பத்தாரை தங்களின் உணவகத்திற்கு அழைத்து, சமயலறை குழுவினரிடம் பேசுமாறு அழைப்பு விடுத்துள்ளது. அதன் பிறகு மீண்டும் தங்களிடம் உணவு ஆர்டர் செய்வார்கள் என்று நம்புகிறோம் என்று கூறியிருக்கிறது. இந்நிலையில், அந்த பெண் வெளியிட்ட இணையதள பதிவை, பார்த்த இணையவாசிகள் அந்நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.