Categories
உலக செய்திகள்

“மருத்துவ உலகில் ஆச்சர்யம்!”.. சிகிச்சை மேற்கொள்ளாமல் குணமடைந்த எய்ட்ஸ் நோயாளி..!!

அர்ஜெண்டினாவில் பெண் ஒருவர் மாத்திரை மற்றும் சிகிச்சை எதுவுமின்றி எய்ட்ஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தது மருத்துவ உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அர்ஜெண்டினாவில் இருக்கும் எஸ்பரென்சா என்னும் நகரில் வசிக்கும் 30 வயது பெண்ணிற்கு கடந்த 2013 ஆம் வருடத்தில் எய்ட்ஸ் நோய் தாக்கம் ஏற்பட்டது. அதன்பின்பு, அவரின் கணவர், கடந்த 2017 ஆம் வருடத்தில் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்தார். எனவே, அந்த பெண் அதிக வீரியம் கொண்ட மருந்துகளை எடுத்து வந்தார்.

எனினும், மாத்திரையின் வீரியம் அதிகமாக இருந்ததால், உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் பல வருடங்களுக்கு முன்பு அவர் மாத்திரை உட்கொள்வதை நிறுத்திக் கொண்டார். சில வருடங்கள் கடந்த நிலையிலும் அவர் இயல்பாகவே இருந்தார். எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆச்சர்யம் காத்திருந்தது. அதாவது அவர் உடலில், சிறிதும் எய்ட்ஸ் நோய்க்கான கிருமி இல்லை. பொதுவாக எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை உட்கொண்டால், அது வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும். எனினும், மாத்திரை உட்கொள்வதை நிறுத்தினால், வைரஸ் கிருமி மீண்டும் உயிர்த்தெழுந்து தாக்குதலை அதிகரிக்கும்.

ஆனால், இந்த பெண்ணின் உடலில் மரபணு, ரத்த அணுக்கள், திசுக்கள் போன்ற எந்த பகுதியிலும் எய்ட்ஸ் நோய்க்கான கிருமி இல்லாமல் போய்விட்டது. எந்த வித சிகிச்சையும், மேற்கொள்ளாமல் எந்தவித மருந்தும் உட்கொள்ளாமல் அந்த பெண் பூரண குணமடைந்து தான் மருத்துவர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

மேலும், அது எவ்வாறு சாத்தியம்? என்பதற்கான பதிலும் மருத்துவர்களிடம் இல்லை. எனினும் பியூனஸ் ஏரிசில் இருக்கும் உயிரி மருத்துவ ஆய்வு மைய விஞ்ஞானியான ஷு யூபியூனஸ்,  இந்த நிகழ்வு மூலம், எய்ட்ஸ் நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை ஒளி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |