காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்த காரணத்தினால் பெண் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஓசூரில் இருக்கும் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்-மரகதம் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருக்கும் நிலையில் அவரை விசாரிக்க காவல்துறையினர் அடிக்கடி அழைத்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. திமுக நிர்வாகி கொலை வழக்கிலும் ராதாகிருஷ்ணனை விசாரிக்க எண்ணி வந்த பொழுது ராதாகிருஷ்ணன் தலைமறைவாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் மனைவி மரகதத்திடமும் மகனிடமும் விசாரணை மேற்கொண்டு அடிக்கடி தொல்லைகள் கொடுத்து வந்துள்ளனர் காவல்துறையினர். தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்த காரணத்தினால் மனவேதனையுடன் காணப்பட்ட மரகதம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பூச்சி மருந்தை குடித்து உள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மரகதம் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.