வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்
அரக்கோணத்தில் உள்ள முபாரக் நகரைச் சேர்ந்தவர் ஆரிப் ஹாஜிரா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. நேற்று வீட்டில் தனியாக இருந்த ஹாஜிரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் ஹாஜிராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ராணிப்பேட்டை உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் ஹாஜிராவின் கணவன் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தான் ஹாஜிரா தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவே ஹாஜிராவின் கணவர் குடும்பத்தை கைது செய்ய வேண்டுமென ஹாஜிராவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை களைய செய்துள்ளனர்.