அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், நிர்வாணமான நிலையில் பொது மக்களின் உடைமைகளை சேதப்படுத்தியதால் கைதாகியுள்ளார்.
அமெரிக்க நாட்டில் உள்ள Albuquerque என்ற நகரில் வசிக்கும் ஒரு பெண், மருத்துவமனை ஆடை அணிந்திருந்தார். இந்நிலையில் திடீரென்று சாலைக்குச் சென்று தன் ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்றிருக்கிறார். அதன் பின்பு சாலையில் நின்ற வாகனங்களை அடித்து பொருட்களை சேதப்படுத்தினார்.
எனவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரை தடுக்க முயற்சித்தனர். எனினும் அந்த பெண் காவல்துறையினர் மீது பொருட்களை தூக்கி எறிந்தார். எனவே வேறுவழியின்றி அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவரது கையில் விலங்கை மாட்டி கைது செய்து அழைத்துச்சென்றனர்.