உக்ரைன் போரில் ஈடுபட்ட ரஷ்ய வீரமான தன் கணவரை கொன்ற புடின் அரசை பழி வாங்குவதற்காக ஒரு பெண் உக்ரைனை ஆதரிக்கும் படையில் இணைந்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் நான்கு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உக்ரைன் நாட்டில் தன் படைகளை போருக்கு வழிநடத்த மறுத்தார். எனவே, ரஷ்ய அரசு அவரை தூக்கிலிட்டது. எனவே, அவரின் மனைவி உக்ரைன் நாட்டிற்காக ஆதரவு தெரிவிக்கும் Freedom of Russia Legion என்ற ரஷ்யப்படையில் இணைந்திருக்கிறார்.
அவர், தன் அடையாளங்களை மறைத்தவாறு ஒரு வீடியோவில் தெரிவித்ததாவது, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ரஷ்ய நாட்டிற்கான உண்மையான சுதந்திரத்தை பெற வேண்டும். கொடுங்கோலனை பொறுத்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு எங்கள் படையில் இணையுங்கள் என்று தன் நாட்டு மக்கள் மற்றும் பெண்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.