Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ! நாகசைதன்யா ஷூட்டிங் செட்டை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்…. காரணம் என்ன….? திடீர் மோதலால் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள மேலகோட் என்ற இடத்தில் நடைபெற்று. இங்கு ஒரு பிரம்மாண்டமான செட்டை அமைத்து படக்குழுவினர் ஷூட்டிங் நடத்தி வருகின்றனர்.

இந்த செட் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் ராயகோபுர கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு அருகே மதுபான கடை போன்ற செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்ததால் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வரும் பக்தர்கள் ஆத்திரமடைந்து செட்டை அடித்து நொறுக்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு ஷூட்டிங் நடத்துவதற்கு 2 நாட்கள் மட்டுமே அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், 2 நாட்களை தாண்டியும் ஷூட்டிங் நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், கோவில் அருகே மதுபான கடை போன்ற செட் அமைத்து ஷூட்டிங் நடத்துவதாக எந்த ஒரு விவரத்தையும் கூறவில்லை என்கின்றனர். மேலும் கிராம மக்கள் தகராறு செய்த போது நடிகர் நாக சைதன்யா அங்குதான் இருந்ததாக கூறப்படும் நிலையில், படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமும் அறிவிப்பும் வெளியிடவில்லை.

Categories

Tech |