Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvZIM : மிடில் ஆர்டர் சொதப்பல்….. 154 ரன்களை இலக்காக நிர்ணயித்த விண்டீஸ்..!!

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. 

ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்படும். இந்நிலையில் இன்றைய 8ஆவது தகுதி சுற்றுப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதியது. முன்னதாக நடந்த தகுதி சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது. அதேசமயம் ஜிம்பாவே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது.

இந்நிலையில் இன்றைய தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இருவரும் களமிறங்கினர். இதில் தொடக்க வீரர் மேயர்ஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதனைத் தொடர்ந்து வந்த எவின் லூயிஸ் 15,  நிக்கோலஸ் பூரன் 7 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்த போதிலும், மற்றொரு துவக்க வீரர் சார்லஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 45(36) ரன்களில் ஆட்டமிழந்தார்..

அதைத்தொடர்ந்து வந்த ஷர்மர் புரூக்ஸ் 0, ஜேசன் ஹோல்டர் 4 என யாருமே நிலைத்து நிற்காமல் வருவதும் போவதுமாக இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 13.6 ஓவரில் 101 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து இருந்தது. இதையடுத்து ரோவ்மன் பவல் மற்றும் அகேல் ஹொசின் இருவரும் ஜோடி சேர்ந்து சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினர். பின் கடைசி ஓவரில் ரோவ்மன் பவல் 2 சிக்ஸர் அடித்து ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது.

 

ரோவ்மன் பவல் 21 பந்துகளில் (2 சிக்ஸர், 1 பவுண்டரி) 28 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் அகேல் ஹொசின் 23 ரன்களுடனும், ஓடியன் ஸ்மித் 1 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்..

Categories

Tech |