பண்ணாரி அருகே ஏற்பட்ட வாகன விபத்து ஏற்பட்டதில், உயிருக்கு போராடிய டிரைவரை மீட்காமல், சாலையோரம் சிதறிக்கிடந்த தக்காளிப் பழங்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் மனித நேயம் காற்றில் பறந்துவிட்டது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து தக்காளிப் பழங்களை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி, சரக்கு வாகனம் ஓன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வாகனம் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்த சமயம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தவிபத்தில் பலத்த காயங்களுடன் டிரைவர் உயிர் தப்பியுள்ளார். மேலும் வாகனத்தில் இருந்த நிறைய தக்காளிப் பெட்டிகள் சாலையில் அங்கும் இங்கும் சிதறி கிடந்துள்ளன. இதனை பார்த்த அப்பகுதி மக்களும், சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் சிலரும் விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாமல் , சாலையோரத்தில் சிதறிக் கிடந்த தக்காளிப் பழங்களை போட்டிபோட்டுக்கொண்டு எடுத்துச்செல்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் டிரைவரை மீட்டு உடனே , சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தினால் நம்முடைய மனிதநேயமும், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் வேண்டும் என்ற அரசின் நிபந்தனையும், பொதுமக்கள் தக்காளிப் பழங்களை அள்ளி செல்வதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, காற்றில் பறந்துவிட்டது என்று சமூக ஆர்வலர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.