Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணமான 1 வாரத்திற்குள்… உடல் நசுங்கி இறந்த மனைவி… கதறிய கணவன்… சாலை விதிமீறலால் நடந்த சோகம்…!!

கள்ளக்குறிச்சியில்  திருமணமான சில நாட்களில் மனைவி  விபத்தில்  உயிரிழந்த  சம்பவம்  அப்பகுதியில்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்  மாவட்டம்  கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த பொறியாளரான பால முருகனுக்கும்  அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாலமுருகன் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர். மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலாவின் நண்பர் சந்தோஷ் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வர பின்னால் பாலமுருகனும் அவரை அடுத்து பிரியதர்ஷினியும் அமர்ந்து சென்றுள்ளனர்.

Image result for accident

கள்ளக்குறிச்சி அம்மன் நகர் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனம் மீது மோதியதில் பிரியதர்ஷினி சாலை நடுவேயும் பாலமுருகனும் சந்தோஷம் சாலையோரம் விழுந்தன. சாலை நடுவே விழுந்த பிரியதர்ஷினி மீது அவ்வழியாக வந்த லாரி ஏறியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். பாலமுருகன் சந்தோஷ் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நாராயணன் மூவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்ததோடு 3 பேரும் தலை கவசம் அணியாமல் வந்தது தான் இந்த விபத்திற்கு பிரதான காரணமாக இருக்கிறது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Categories

Tech |